மீண்டும் சிம்பு-கவுதம்-ரஹ்மான் கூட்டணி
ADDED : 1710 days ago
'மாநாடு, பத்து தல' படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகி உள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பின் இந்த மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகின்றனர். தற்போது சிம்பு நடிக்கும் பத்து தல படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.