நடனப் பள்ளிக்கு மூடுவிழா நடத்திய ரீமா கல்லிங்கல்
தமிழில் யுவன் யுவதி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். ஷோபனா, மஞ்சு வாரியரை போலவே, நடிகை ரீமா கல்லிங்கலும் நாட்டியத்தில் வல்லவர். அதனாலேயே பல மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் விதமாக 'மாமாங்கம்' என்கிற நாட்டிய பள்ளியை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கினார். நடிகை, தயாரிப்பாளர், நாட்டியப்பள்ளி நிறுவனர் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளையும் கவனித்து வந்த ரீமா கல்லிங்கல் தற்போது தனது நாட்டியப்பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த கொரோனா காலகட்டம் எனது நாட்டியப் பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி இதை மூடுகிறேன். இந்த இடத்தில் நடனம் சொல்லி தந்தது, நடன ஒத்திகை பார்த்தது, திரைப்படங்களை திரையிட்டது, ஒர்க்ஷாப் நடத்தியது என பசுமையான நினைவுகள் நிறைய உள்ளன. நாட்டியப்பள்ளி தான் மூடப்படுகிறதே தவிர வரும் காலங்களில் மேடை நாடகங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்