பிறந்தநாளில் வெளிப்பட்ட காதல் நிச்சயம்
ADDED : 1719 days ago
பிகில், தனுஷ் ராசி நேயர்களை படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான், நேற்று தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். அங்கு இன்ப அதிர்ச்சியாக அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோய் மோன் பங்கேற்று, அவரிடம் காதலை வெளிப்படுத்தினார். இதை ரெபா ஏற்றதோடு, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.
''லாக்டவுனால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்கவில்லை, அவரை பார்த்ததும் காதல் சொல்ல தோன்றியது'' என ஜோய் மோன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷால் உடன் எப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸிலும் நடிக்கிறார்.