உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் காஞ்சனா கூட்டணி

மீண்டும் காஞ்சனா கூட்டணி

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் 'ருத்ரன்'. தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக களமிறங்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கலந்த திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்போது இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க சரத்குமார் இதில் இணைந்துள்ளார். இதன்மூலம் காஞ்சனா படத்திற்கு பின் லாரன்ஸும், சரத்குமார் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !