ஆஸ்கர் ரேஸில் நுழைந்த வித்யாபாலன் குறும்படம்
ADDED : 1708 days ago
2021ஆம் வருடத்திற்கான, 93வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்கள் ஆன்லைன் மூலமாகவே திரையிடல் செய்யப்பட்டு விருதுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் வரும் பி-28ஆம் தேதி நடைபெற இருந்த ஆஸ்கர் விருது விழா, கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் ஏப்-25க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்துள்ள நட்கட் என்கிற குறும்படம், அதிக வரவேற்பை பெற்று சிறந்த குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. பாலியல் சமத்துவம் பற்றி பேசியுள்ள இந்த குறும்படம் ஆஸ்கர் விருது தேர்வு குழுவினர் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளதாம்.