கூழாங்கல்-க்கு சர்வதேச விருது
ADDED : 1700 days ago
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்கள் தயாரிப்பு, வினியோகத்தில் ஈடுபட்டுள்ளனர் காதலர்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா. புதியவர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூழாங்கல் படத்தை இவர்கள் வாங்கி, வெளியிடுகின்றனர். பல சர்வதேச விழாக்களில் பங்கேற்றுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன் ரோட்டர்டாம் விழாவில் பங்கேற்றது. இதில் பாரம்பரிய உடையணித்து படக்குழுவினர் பங்கேற்றனர். இப்போது இப்படத்திற்கு டைகர் விருது கிடைத்துள்ளது. தங்களது முதல் படத்திற்கே இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்தது மகழ்ச்சி என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.