உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் படம் : அமெரிக்கா பறக்கும் தனுஷ்

ஹாலிவுட் படம் : அமெரிக்கா பறக்கும் தனுஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெயரிடப்படாத தனது 43வது படத்தில் நடிக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்குகிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா செல்கிறார் தனுஷ். இரண்டு மாதங்கள் அங்கு நடக்கும் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மே மாதம் தான் சென்னை திரும்ப உள்ளார். அதன்பின்னர் தான் நடித்து வரும் மற்ற தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !