உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அன்பே பேரன்பே' - சூர்யாவின் முதல் 100 மில்லியன் பாடல்

'அன்பே பேரன்பே' - சூர்யாவின் முதல் 100 மில்லியன் பாடல்

செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த படம் 'என்ஜிகே'. செல்வராகவன், யுவன் கூட்டணியில் 13 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த படம்தான் 'என்ஜிகே'. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் உமாதேவி எழுதி சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் பாடிய 'அன்பே பேரன்பே' பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

தற்போது அப்பாடல் யு டியுபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சூர்யா நடித்த படம் ஒன்றின் பாடல் 100 மில்லியன் சாதனைகளைப் புரிவது இதுவே முதல் முறை. யுவன் இசையமைத்த பாடல் ஒன்று 100 மில்லியனைக் கடப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு யுவன் இசையமைத்த 'மாரி 2' பாடலான 'ரௌடி பேபி' 1000 மில்லியனைக் கடந்து தமிழ்த் திரைப்படப் பாடல்களில் யு டியுபில் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !