உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவக்குமாரின் சபதம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சிவக்குமாரின் சபதம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

'மீசையை முறுக்கு' படத்திற்கு பின் ஆதி இயக்கி, நடித்து, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'சிவக்குமாரின் சபதம்'. நாயகியாக மாதுரி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூரில் நடந்து வந்தது. இப்போது 65 நாட்களில் படத்தை முடித்துள்ளனர். பொழுதுபோக்கு நிறைந்த குடும்ப படமாகவும், சமூகத்திற்கு ஒரு முக்கிய கருத்தை சொல்லும் விதமாகவும் இப்படம் தயாராகி உள்ளது. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !