ஹேக்கான நந்திதாவின் இன்ஸ்டா
ADDED : 1745 days ago
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நந்திதா சமூகவலைதளங்களில் பிஸியாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், சற்று நேரத்தில் சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் அவரது கணக்கு ஹேக்காகி உள்ளது. ''என்னால் எனது இன்ஸ்டா கணக்கை பயன்படுத்த முடியவில்லை. எனது பக்கத்திலிருந்து ஏதேனும் செய்திகள் வந்தால் பதில் தர வேண்டாம், எச்சரிக்கையாக இருங்கள்'' என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.