மீண்டும் விஜய்யை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
ADDED : 1809 days ago
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அந்த படத்தை அடுத்து கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார். அதையடுத்து வந்த லாக்டவுன் மற்றும் அரசியல் வேலைகளில் கமல் இறங்கி விட்டதால் விக்ரம் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்காரணமாக அடுத்து கமல் வருவதற்குள் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்த படத்தை முடித்ததும் கமலின் விக்ரமை முடித்து விட்டு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம் லோகேஷ் கனகராஜ்.