புத்தகத்தில் விஜய்யை நினைவு கூர்ந்த பிரியங்கா சோப்ரா
2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் அவர் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த வகையில் பிரியங்கா சோப்ராவின் முதல் ஹீரோ விஜய் தான்.
அதன்பிறகு பாலிவுட், ஹாலிவுட் என்று பிரபலமாகி விட்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அன்பினிஷ்டு என்ற தலைப்பில் தனது வாழ்வில் நடந்த நல்ல, கெட்ட அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் தனது முதல் ஹீரோவான விஜய்யைப் பற்றி கூறுகையில், விஜய்யின் பணிவும், ரசிகர்களுடன் அவர் வைத்துள்ள நெருக்கமும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமெக்காவில் குவாண்டிகா தொடரில் நடித்து வந்தபோது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அப்போது விஜய் தனது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதை நான் நினைவில் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.