தனுஷ் சுசீந்திரன் பட நாயகிக்கு வாழ்வு தருமா எப்-3?
ADDED : 1713 days ago
நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தன. தனுஷுடன் இணைந்து நடித்த பட்டாஸ் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் மெஹ்ரீன்.
கடந்த 2019ல் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் உடன் மெஹ்ரீன் இணைந்து நடித்த எப்-2 படம் நன்றாக ஓடியதால், தற்போது அதன் அடுத்த பாகமாக உருவாகி வரும் எப்-3 படத்திலும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து, அதில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இந்த எப்-3 படம் தெலுங்கில் தனது பயணத்தை சீராக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் மெஹ்ரீன்.