உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி

டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி

போயாபதி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. பான் இந்தியா படமாக வெளியாக வேண்டிய இப்படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முந்தைய தயாரிப்புகளுக்காக வாங்கிய கடன் தொகை பாக்கியைத் தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து மறுநாள் டிசம்பர் 6ம் தேதியாவது படத்தை வெளியிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்தார்கள் என டோலிவுட் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், அதுவும் முடியவில்லை. தற்போது இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளில் இருக்கிறார்களாம். வெளியீட்டிற்கு முன்பாக படம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தை இன்னும் தள்ளி வெளியிட்டால் அந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு குறைந்துவிடும் என நினைக்கிறார்களாம். நாளைக்குள் இப்படத்தின் வெளியீடு குறித்த உறுதியான தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !