மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1668 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1668 days ago
செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தனது கணவர் பிரபா மீதான காதல் குறித்து அவ்வப்போது பேசி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்களுக்கு மேல் பங்கேற்று விட்டு வெளியே சில தினங்களில் அவரது தந்தை மறைந்தது அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த சோகத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.
காதலர் தினத்தை முன்னிட்டு சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டதாவது : ''எல்லா மாசமும் 25ம் தேதிய தான் காதலர் தினம் போல எண்ணுவோம். பிப்.,14 மேல அவ்ளோ ஈடுபாடு இல்ல. அதுவும் இந்த வருடம் 25ம் தேதினு தெரிஞ்சும் வாழ்த்திக்கிற நார்மல் நிலைக்கு இன்னும் வரல. எனினும் உனக்கு காதலர் தின வாழ்த்துகளும், நிறைய காதலும் பப்பு. உள்ள போனா(பிக்பாஸ்) என்ன நடக்கும்னு உனக்கு தெரியாம இல்ல.. தெரிஞ்சும் என் ஆசைக்காக என்ன தடுக்காம அனுப்பின..
.
கணவன்ங்கிற ஒரே காரணத்தால உன்னையும் சேர்த்து காயப்படுத்துன அத்தனை விமர்சனஙகளையும் தாங்கிக்கிட்டு, சில விமர்சனத்துக்கு பதிலடியும் கொடுத்து, எனக்காக நான் வெளிய வந்த அப்புறமும் புன்னகையையும் காதலையும் தவிற வேற எதையுமே காட்டிக்காம, வெளிய வந்த உடனே எனக்கு நடந்த இன்னொரு இடியையும் என் கூடவே தாங்கிகிட்டு, உன் வீட்டு சிரமத்தையும் தாங்கிகிட்டு, இன்னக்கி வரைக்கும் என்ன சிரிக்க வைக்க மட்டுமே ஒரு ஒரு நாளும் முயற்சி எடுக்குற உனக்கு என்ன கைமாறு செய்ய போறேனு தெரியல..! காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு.
.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் பப்பு. நம்ம கண்ட கனவெல்லாம் விரைவில் நெனவாகும். அதுக்காக ஒருத்தர இன்னொருத்தர் கீழ விழும் போதெல்லாம் தூக்கி விட்டுக்குட்டு இதே மாதிரி கனவ நோக்கி பயணிப்போம். உன் நேசிப்பு தான் என் ஆகப்பெரிய பெருமை, சொத்து எல்லாம்..
லவ் யூ பப்பு! காதலர் தின நல்வாழ்த்துகள்!
1668 days ago
1668 days ago