13 கிலோ எடையைக் குறைத்த ஐஸ்வர்யா தத்தா
ADDED : 1696 days ago
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் உட்பட தற்போது தமிழில் 7 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதுதவிர 'ஷ்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து இன்னும் ஸ்மிம்மாகி இருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா.