உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் கேட்பீர்களா, அஜித் ரசிகர்களே ?

பிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் கேட்பீர்களா, அஜித் ரசிகர்களே ?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் சினிமா ரசிகர்கள் பலருக்கும் அறிந்த ஒன்றுதான்.



இப்படியான ரசிகர்களை வைத்து ஒன்றும் பண்ண முடியாத என்ற காரணத்தால்தான் பல வருடங்களுக்கு முன்பே அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டார். அவர் கலைத்தது முற்றிலும் சரிதான் என்பதற்கு மற்றொரு உதாரணமாய் அஜித் ரசிகர்கள் நேற்று செய்த செயல் ஒன்று அமைந்துள்ளது.


பாரதப் பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வந்திருந்தார். அவர் வரும் வழியில் சாலையில் அஜித் ரசிகர்கள் சிலர் 'வலிமை அப்டேட்' என எழுதப்பட்ட அட்டைகளைப் பிடித்துக் கொண்டு 'வலிமை அப்டேட்' என குரல் எழுப்பியுள்ளனர்.


இதற்கு முன்பு சசிகலா சென்னை வந்த போது அதை நேரடி ஒளிபரப்பு செய்த சில ஊடகங்களின் யு டியூப் கமெண்ட்டுகளில் 'வலிமை அப்டேட்' என ரசிகர்கள் பதிவிட்டுக் கொண்டே இருந்தனர்.


ரசிகர்களின் இந்த பொறுப்பற்ற செயலை பெருமிதமாக சில அஜித் ரசிகர்கள் பகிர்வதைப் பார்ப்பவர்களுக்கு கோபம் நிச்சயம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !