உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நானும் சிங்கிள்தான்', சிம்புவின் ஜாலி புலம்பல்

'நானும் சிங்கிள்தான்', சிம்புவின் ஜாலி புலம்பல்

தமிழ்த் திரையுலகில் அதிகமான கிசுகிசுக்களில் சிக்கிய ஒரு நடிகர் சிம்பு. அவருக்கும் நயன்தாராவுக்கும் காதல் இருந்த போதும் சரி, அவருக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் இருந்த போதும் சரி, அடிக்கடி செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருப்பார்.



38 வயது ஆகியுள்ள சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். அவருடைய தம்பி, தங்கைக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் சிம்பு காதல் தோல்விகளால்தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என ஒரு தகவல் கோலிவுட்டில் உலவியதுண்டு.


இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு ஜாலி புலம்பல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் மகத் வளர்க்கும் பெண் நாய் ஒன்றிடம் சிம்பு 'சிங்கிளாக' இருப்பது பற்றிய புலம்பலாகத்தான் அது உள்ளது.


சிம்புவின் வீடியோவிற்கு விதவிதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !