உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் காதலர் தின உரை

பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் காதலர் தின உரை

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்து குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.


இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் 143 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். அதோடு அங்கு கூடிய பொதுமக்களிடமும் மரக்கன்றுகளை நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

அதையடுத்து மீடியாக்களிடம் காதலர் தின குறித்து ரம்யா பாண்டியன் கூறுகையில், நாம் ரசிக்க வேண்டிய விசயங்களுக்கு நம்முடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும். முக்கியமாக மரங்களை வீட்டில் பால்கனி, மாடி அல்லது இப்படி மரம் நட்டு வளர்த்து சமூகத்திற்கு இயற்கைக்கும் பயன்படும் வகையில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இந்த காதலர் தினத்தன்று இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் அன்பை காட்டுங்கள். நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள். என்னைப்போன்று சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிகமான அன்பை காட்டுங்கள் என்றும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !