நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டிய சென்னை ரசிகர்கள்!
ADDED : 1774 days ago
ஜெயம்ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழில் நிதி அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். குறிப்பாக, முன்பு குஷ்புவிற்கு கோயில் கட்டி பூஜை நடத்தியது போன்று இப்போது சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு சிலை வடித்து அதற்கு பாலாபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ள நிதி அகர்வால், இதை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாக நினைப்பதாகவும், தமிழக ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.