மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1690 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1690 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1690 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1690 days ago
தமிழ் சினிமா உலகில் ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே முன்னணி நடிகராக இருக்கும் ஒரே நடிகர் அஜித்குமார். அவருடைய படங்களை விரும்பி ரசிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது வெளியிலும் அதிகமாகவே ஆக்டிவ்வாக இருக்கிறார்கள்.
பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்பது, சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி மற்றும் நமது வீரர் அஷ்வினிடம் அப்டேட் கேட்பது என சில அபத்தங்களைச் செய்தனர். அதைப் பார்த்து பொறுக்க முடியாத அஜித், நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அதில், வலிமை படத்தின் செய்திகள், உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள், பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், கடைபிடிக்க வேண்டும். என் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவர் என நம்புகிறேன் என்று தனது ரசிகர்களுக்கு நன்றாகப் புரியும்படி சொல்லிவிட்டார்.
ஆனாலும், வலிமை அப்டேட் பற்றிக் கேட்பதை அஜித் ரசிகர்கள் நிறுத்துவார்களா என்பது சந்தேகம் தான். விஜய் படம் பற்றி அடுத்து ஏதாவது ஒரு அப்டேட் வந்தால் அவர்கள் தானாக வலிமை அப்டேட் எனக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை நிறுத்த ஒரே வழி, படம் வெளிவரும் வரை மாதம் ஒரு முறையாவது வலிமை பற்றிய அப்டேட்டை படக்குழுவினரே வெளியிட்டுவிட வேண்டும்.
விரைவில் பர்ஸ்ட் லுக்
இதற்கிடையே தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டரில், ''வணக்கம், வலிமை படத்திற்கு நீங்கள் காட்டும் அன்பை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
1690 days ago
1690 days ago
1690 days ago
1690 days ago