உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணைகிறதா வலிமை கூட்டணி?

மீண்டும் இணைகிறதா வலிமை கூட்டணி?

சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்ள் தொடர்ந்து நடித்தார் அஜித். அதையடுத்து அமிதாப் பச்சனின் பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் எச்.வினோத் இயக்கத்தில் நடித்தவர், தற்போது வலிமை படத்தில் அவருடன் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், வலிமை படத்தை அடுத்து மீண்டும் போனிகபூர் தயாரிப்பில். எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான கதையை அஜித்திடம் சொல்லி அவர் ஓகே பண்ணி விட்டதாகவும், வலிமை படம் திரைக்கு வருவதற்கு முன்பே அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !