மீண்டும் காதலில் விழுந்த சனம் ஷெட்டி
ADDED : 1690 days ago
பிக்பாஸ் -3 நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷனை காதலித்தார் நடிகை சனம் ஷெட்டி. நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் திருமணம் நின்று போனது. அதன்பிறகு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட இன்னும் பிரபலமானார்.
இந்த நிலையில், காதலர் தினத்தன்று தனது புதிய காதலலை வெளிப்படுத்தி உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒருவரின் கைகளை பிடித்தபடி சனம் ஷெட்டி ஒரு போட்டோவை வெளியிட்டு, அதன் உடன், ''நீங்கள் என் உலகத்தை ஒளிரச் செய்கிறீர்கள். காதலர் தினத்தில் உங்களுடன் டின்னர் சாப்பிட்டது ஒரு மேஜிக் போன்று உள்ளது, நன்றி'' என பதிவிட்டுள்ளார். ஆனால் அவரின் முகத்தையோ காண்பிக்கவில்லை. அவர் யார் என்பதையும் தெரிவிக்கவில்லை.