விஜய் 65ல் இணையும் டெக்னீஷியன்கள்
ADDED : 1693 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ், குக் வித் கோமாளி புகழ் என சில காமெடியன்கள் இணைந்திருப்பதை அடுத்து, தற்போது கேஜிஎப் படத்தில் பணியாற்றிய இரட்டை சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் மற்றும் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோரும் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.