உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உப்பெனா ரீமேக்கில் விஜய் மகன் அறிமுகமாகிறாரா?

உப்பெனா ரீமேக்கில் விஜய் மகன் அறிமுகமாகிறாரா?

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்யும், தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து சமீபத்தில் வெளியான உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் அறிமுகமாகப் போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள விஜய் சேதுபதியே இப்படத்தை தமிழில் தயாரித்து, மீண்டும் வில்லனாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !