உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கர் படத்தில் ராஷ்மிகா மந்தனா

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ள முதல் படமான சுல்தான் ஏப்ரலில் திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக விஜய்யின் 65வது படத்திலும் ராஷ்மிகா நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் ஷங்கர் மற்றும் ராம் சரணுடன் இணைந்து அவர் பணியாற்றப்போகும் முதல் படம் இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !