உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் ஓகே சொன்னால் பாபநாசம் 2 ரெடியாகும்: ஜீத்து ஜோசப்

கமல் ஓகே சொன்னால் பாபநாசம் 2 ரெடியாகும்: ஜீத்து ஜோசப்

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் இப்படம் கமல் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தயாரானது. மலையாளத்தைப் போலவே தமிழிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் - மீனாவே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இப்படம் ரிலீசாக உள்ளது.

த்ரிஷ்யம் 2 படம் உருவாகிறது என்ற தகவல் வெளியான போதே, தமிழிலும் பாபநாசம் 2 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படியே ரீமேக் செய்யப்பட்டால் அதில் கமலே நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் இந்தியன் 2, விக்ரம் என ஏற்கனவே ஒப்பந்தமான பட வேலைகளையே சட்டசபைத் தேர்தலையொட்டி தள்ளி வைத்துள்ளார் கமல். எனவே பாபநாசம் 2வில் அவர் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். அதில், 'கமல் அனுமதி கிடைத்தால் 'பாபநாசம் 2' படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகவும், கமலின் முடிவை பொறுத்தே 'பாபநாசம் 2' படம் உருவாகுமா? என்பதை சொல்ல முடியும்' எனவும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !