உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைக்கிளிங் சென்ற போது விபத்து: அஜித் பட நாயகிக்கு கை விரல் முறிவு

சைக்கிளிங் சென்ற போது விபத்து: அஜித் பட நாயகிக்கு கை விரல் முறிவு

1999ம் ஆண்டு, 'உன்னைத் தேடி' படம் மூலம் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. தொடர்ந்து சில படங்கள் நடித்தவர் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடம் வசித்து வரும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 'தான் சைக்கிளிங் சென்ற போது விபத்தில் சிக்கியதாகவும், இதில் தன் கை விரல் முறிந்து விட்டதாகவும், ஆனாலும் தான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடவே அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கண்ணுக்கு அருகே காயத்துடன் காட்சியளிக்கிறார் மாளவிகா. இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பாலோயர்கள், கவனமாக இருக்கும்படி அறிவுரையுடன் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !