மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1659 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1659 days ago
சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டை நாய். ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார்.
கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில ஆர்கே சுரேஷ் பேசியதாவது: இந்தப்படத்திற்கு வேட்டை நாய் என பைரவரின் பெயரை டைட்டிலாக வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்பட்டது. புதியபாதை படத்தில் வருவது போலத்தான் இந்த படத்தில் என் கதாபாத்திரமும். அந்த மாதிரியான படம் என்றும் சொல்லாம். ஒரு முரட்டுத்தனமாக மனிதனை ஒரு பெண் எப்படி மாற்றுகிறாள் என்பதுதான் கதை.
படங்களில் முத்தக் காட்சியில் நடிக்கவேண்டுமென்றால் முன்கூட்டியே என் மனைவியின் அனுமதியைப் பெற்றுவிடுவேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் முத்தக் காட்சியைப் பார்க்கும்போது எதுவும் வித்தியாசமாக, விரசமாகத் தெரியாது. படம் பார்க்கும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களை அதற்குள் பொருத்திக் கொள்வார்கள்.
தியேட்டர்களோ, ஓடிடி தளங்களோ எதுவானாலும் பெரிய படங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சிறிய படங்களுக்கும் கொடுக்க வேண்டும். சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது. என்றார்
1659 days ago
1659 days ago