மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1659 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1659 days ago
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் வா பகண்டையா. ரெவிலேஷன் கிரியேசன்ஸ் சார்பில் ப.ஜெயக்குமார் தயாரித்து இயக்கி இருக்கிறார். புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இன்னொரு வில்லனாக நடிக்கிறார்.
இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், 'வெண்ணிலா கபடி குழு' நிதிஷ் வீரா, மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.கே.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி ஜெயக்குமார் கூறியதாவது: பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஆணவக் கொலை, சாதி - இன மோதலைத் தூண்டி மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சின்னு நம்மைச் சூழ்ந்திருக்கிற சமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, அதுக்கெல்லாம் தீர்வு என்னன்னு அலசிருக்கேன். என்கிறார்.
1659 days ago
1659 days ago