கார்த்திக் சுப்புராஜ் படத்தில் வாணி போஜன்?
ADDED : 1975 days ago
ஜகமே தந்திரம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக, விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் அவர், விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பாரா அல்லது துருவ்விற்கு ஜோடியா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.