5 மாத மகன் கையால் கணவரின் கடைசி பட டிரைலரை வெளியிட்ட மேக்னா ராஜ்
ADDED : 1733 days ago
நடிகர் அர்ஜுனின் மருமகனும், பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்தாண்டு திடீரென மரணம் அடைந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த அவரது மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது.
ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் அக்குழந்தையின் புகைப்படத்தை காதலர் தினத்தன்று மேக்னா வெளியிட்டார். குழந்தை அப்படியே சிரஞ்சீவி சர்ஜா போலவே இருப்பதாகக் கூறி அப்புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்தன.
இந்நிலையில் மரணத்திற்கு முன் தன் கணவர் கடைசியாக நடித்த ராஜமார்த்தாண்டா படத்தின் டிரைலரை தன் மகன் கையால் வெளியிட்டுள்ளார் மேக்னா. குட்டி சிரஞ்சீவி சர்ஜா வெளியிட்ட அந்த டிரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.