கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு
ADDED : 1689 days ago
ஈஸ்வரன் படத்தை அடுத்து மாநாடு, பத்துதல படங்களில் நடிக்கும் சிம்பு அதையடுத்து கெளதம் மேனனின் புதிய படத்திலும் இணைகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த திரிஷா நடிப்பார் என தெரிகிறது. இதனால் அப்படம் குறித்து ரசிகர்களுக்கிடையே இப்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அதிகமாக சென்று வரும் சிம்பு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்று கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி தரிசனம் செய்துள்ளார். நீண்டகாலமாகவே சிம்புவிற்கு திருமண தடை நீடித்து வருவதால் அதற்கான பரிகாரமாக இப்படி அவர் தீபம் ஏற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சிம்பு.