ரஜினி - கமல் திடீர் சந்திப்பு ஏன்?
ADDED : 1689 days ago
அரசியல் பிரவேசம் இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்ட ரஜினிகாந்த், தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் அடுத்த மாதம் முதல் கலந்து கொள்ளயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இன்று ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன். அவர்களின் இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த பிறகு ரஜினியை சந்தித்து நான் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் கூறி வந்ததால், அவர்களின் இந்த சந்திப்பு நலம் விசாரிப்பாக மட்டுமே இல்லாமல் அரசியல் சம்பந்தமாகவும் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.