காஜலின் ஹிந்தி படம் ஓடிடியில் வெளியீடா?
ADDED : 1735 days ago
இந்தியன்-2, ஹேய் சினாமிகா, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், ஹிந்தியில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் மும்பை சாகா என்ற படத்திலும் நடித்துள்ளார். ஜான் ஆபிரஹாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் தயாரிப்பாளர் மார்ச் 19ல் தியேட்டர்களில் மட்டுமே வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாதமாகவே மும்பை சாகா ஓடிடி தளத்தில் வெளியாகப்போவதாக வெளியாகி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.