உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்களின் நின்று கொல்வான்

புதுமுகங்களின் நின்று கொல்வான்

ஹம்சஹர்ஷா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் நின்று கொல்வான். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மும்மொழிகளில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கியுள்ளார் வி பி சங்கர். அர்ஜூன் சந்த்ரா, கருணா டோக்ரா, யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி, கீதா, நிழல்கள் ரவி, ராஜீவ் பிள்ளை மற்றும் பவித்ரா லோகேஷ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார்.


படம் பற்றி இயக்குனர் வி.பி.சங்கர் கூறியதாவது: ஒரு பணக்கார இளைஞன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ஒரு கர்நாடக இசை குடும்பத்தை சார்ந்த பெண்ணை காதலிக்கிறான். மகனின் காதலை பற்றி தெரிந்த இளைஞனின் தந்தை அவர்களின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.

இந்நிலையில் இசைக் கச்சேரிக்காக கதாநாயகி தனது தாயுடன் கோவா செல்ல, அங்கு கதாநாயகி கடத்தப்படுகிறார். நாயகன் நாயகியை கடத்தல் கும்பலிடமிருந்து கண்டுபிடிக்க முயல பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் வென்றது யார் என்பதை விறுவிறுப்பான முறையில் படமாக்கி இருக்கிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !