நாகார்ஜுனாவுக்கு ஏமாற்றம் தந்த பிரம்மாஸ்திரா படப்பிடிப்பு
ADDED : 1685 days ago
இந்தியில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் என நட்சத்திர பட்டாளத்துடன் நடிகர் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. புராணக்கதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 2003ல் வெளியான கார்கில் படத்திற்கு பிறகு நாகர்ஜுனா இந்தியில் நடித்துள்ள படம் இது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தனக்கு ரொம்பவே ஏமாற்றம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜுனா. காரணம் இந்தப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கப்போகும் ஆசையில் இருந்தாராம். ஆனால் இருவர் நடித்த காட்சிகளையும் தனித்தனியாகவே படமாக்கினார்களாம்.. அதனால் ஒரு காட்சியில் கூட அமிதாப்புடன் இணைந்து நடிக்க முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியுள்ளார் நாகர்ஜுனா. இருவரும் தனித்தனியாக நடித்த காட்சிகளை விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக ஒன்றிணைத்துக்கொள்ள இருக்கிறார்களாம்.