வரலட்சுமி பட அனைத்து மொழி ரீமேக் உரிமையை கைப்பற்றிய தில் ராஜூ
ADDED : 1685 days ago
தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதேசமயம் அல்லரி நரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓரளவு எதிர்பார்ப்புடன் வெளியான நாந்தி என்கிற படமும் மவுத் டாக் மூலமாக பிக் அப் ஆகி டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது.
தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதியாக அல்லரி நரேஷும், அவரை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் வக்கீலாக வரலட்சுமியும் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு எந்த மொழியிலும் ரீமேக் ஆகும் வேல்யூ இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.