விறுவிறு படப்பிடிப்பில் கூகுள் குட்டப்பன்
ADDED : 1685 days ago
கடந்த வருடம் மலையாளத்தில் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' என்கிற படம் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. கிராமத்தில் தனிமையில் இருக்கும் வயதான ஒரு பெரியவருக்கு ஒரு ரோபோ எப்படி துணையாக மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இந்தநிலையில் இந்தப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது. கே.எஸ்.ரவிகுமாரி சீடர்களான சபரி மற்றும் சரவணன் இந்தப்படத்தை இயக்குகிறார்கள்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் மைய கதாபாத்திரமான வயதான பெரியவராக நடிக்கிறார். அவரது மகனாக 'பிக்பாஸ்' புகழ் தர்ஷன்- நடிக்க லாஸ்லியா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், யோகிபாபு, மனோபாலா ஆகியோர் ஓய்வாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகர் மனோபாலா பகிர்ந்துகொண்டுள்ளார்.