பிப்ரவரி 14ல் ரிலீஸ் : இப்போதே ஊர், ஊராக செல்லும் ‛வித் லவ்' குழு
டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், ‛வித் லவ்' படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார். அனஸ்வரா ராஜன் அந்த படத்தில் ஹீரோயின். அபிஷன் உதவியாளர் மதன் இயக்க, டூரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர் மகேஷ் தயாரிக்கிறார். பிப்ரவரி 6 தேதி காதலர் தினத்துக்கு முன்னதாக ரிலீஸ் ஆக உள்ளது. ஆனாலும், பட விளம்பர பணிகளை முன்னமே தொடங்கிவிட்டது படக்குழு.
சமீபத்தில் திருச்சிக்கு சென்றவர்கள், இன்று கோவையில் நடக்கும் ஒரு விழாவில் பங்கு பெறுகிறார்கள். யூத் சப்ஜெக்ட் என்பதால் கல்லுாரிகளுக்கு சென்று, அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வித்லவ் படத்தை படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படம் 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து நல்ல லாபத்தை பெற்றது. அதேபோல் இந்த படமும் நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் இப்படி செய்கிறார்களாம்.
தமிழ் தவிர, தெலுங்கிலும் அதே தேதியில் படம் ரிலீஸ். இந்த குழுவுடன் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யாவும் செல்கிறார். காரணம், அவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார்.