ஆங்கில மருத்துவ முறையை சாடும் சின்னஞ்சிறு கிளியே
ADDED : 1697 days ago
சென்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில் நாதன் தயாரித்துள்ள படம் சின்னஞ்சிறு கிளியே. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கி உள்ளார். இப்படத்தின் ஒளியமைப்பாளராக பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் கூறியதாவது: இது ஆங்கில மருத்துவ முறையில் உள்ள ஆபத்தை சொல்லும் படம். மக்கள் மீது ஆங்கில மருத்துவம் எப்படி திணிக்கப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தின் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் எப்படிப்பட்டது என்பது குறித்து படம் பேசுகிறது. படத்தை தியேட்டரில் வெளியிடுவதோடு, பல விருது விழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறோம். என்றார்.