விஷ்ணுவர்த்தனின் பாலிவுட் படம் ஜூலை 2ல் ரிலீஸ்
ADDED : 1685 days ago
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா 2, சர்வம் உள்பட பல படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன். தற்போது பாலிவுட்டில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது வருகிற ஜூலை 2ம் தேதி அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார்.