உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள திரையுலகில் நுழைந்த தமன்

மலையாள திரையுலகில் நுழைந்த தமன்

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், அதன்பின் இசையமைப்பாளராக தனது ரூட்டை மாற்றிக்கொண்டு, இன்று தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். அவ்வப்போது தமிழில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் 'கடுவா' என்கிற படத்திற்கு தான், தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமன் இசையமைப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'புட்டபொம்மா' பாடல் மூலமாக கேரளாவிலும் அவரது இசைக்கு ரசிகர்கள் உருவாகி இருப்பதால், ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !