நடிகராக வளர்ந்து வரும் டப்பிங் கலைஞர்
ADDED : 1685 days ago
முன்னணி நடிகர்கள் பலருக்கு பின்னணி குரல் கொடுப்பவர் விவந்த். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த பாரீஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது முதல் படம் 2014ல் வெளியான இருக்கு ஆனா இல்ல திரைப்படம். இந்த படம் எனது நடிப்புக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. எனது இரண்டாவது படம் 2018ம் ஆண்டில் வெளியான ஏகாந்தம், இது கிராமப்புற அடிப்படையிலான படம். எனது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் நயம், இது திகில்- திரில்லர் கதையம்சம் கொண்டது. பாரீஸ் ஜெயராஜ் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. என்றார்.