உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 படங்கள்: மீண்டும் இளம் இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்த ரஜினி?

2 படங்கள்: மீண்டும் இளம் இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்த ரஜினி?

கொரோனா பிரச்சினையால் தடைபட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க, ரஜினி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், மார்ச் இறுதி வரை ரஜினி தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், அதனை இளம் இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, ரஜினி சமீபத்தில் தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோ என சிலமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !