அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் அருண் பாண்டியன்
ADDED : 1677 days ago
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி எனப் பன்முகத் திறமையாளராக விளங்கி வருபவர் அருண் பாண்டியன். விசுவின் சிதம்பர ரகசியம் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு சவாலே சமாளி படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
சில வருட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தனது மகள் கீர்த்தி பாண்டியனின் அன்பிற்கினியாள் படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் அடுத்து அருண்பாண்டியன் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் படத்தில் அருண்பாண்டியன் நடிக்க இருக்கிறார். திரில்லர் கதைக்களமான இப்படத்தில் அதர்வா முரளிக்கு அப்பா கதாபாத்திரத்தில் அருண்பாண்டியன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.