அனு இம்மானுவலை சுற்றும் காதல் கிசுகிசு
ADDED : 1675 days ago
தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டுப்பிள்ளை படஙங்கில் நடித்தவர் அனு இம்மானுவல். தற்போது சித்தார்த், சர்வானந்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாசமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜோதி கிருஷ்ணாவை அனு இம்மானுவல் காதலிப்பதாகவும், 23 வயதாகும் இவர், 40 வயதாகும் அந்த இயக்குனரை திருமணம் செய்து கொள்ள தயாராகிக் கொண்டிருப்பதாக டோலிவுட்டில் பரப்பு செய்தி வெளியானது.
அதையடுத்து இப்போது ஒரு தொழிலதிபரின் மகனுடன் அவர் டேட்டிங் செய்து வருவதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனபோதும் இதுபோன்ற செய்திகளுக்கு அவர் எந்தாவெரு விளக்கமும் கொடுக்காததால், இது வதந்தியா? இல்லை உண்மையான செய்தியா? என்று யூகிக்க முடியாத ஒரு செய்தியாகவே சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.