அருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்
ADDED : 1675 days ago
சில படங்கள் அத்தி பூத்தாற்போல தமிழ் சினிமாவில் வெளியாகி, நம் மக்களின் ரசனையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும். அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான அருவி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பலர் அந்தப்படத்தை பாராட்டினார்கள். அந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதிபாலன், தற்போது தமிழ், மலையாளத்தில் பரவலாக நடிக்க தொடங்கி உள்ளார்.
இந்தநிலையில் இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதிதிபாலன் கதாபாத்திரத்தில் பாத்திமா சனா ஷேக் நடிக்க இருக்கிறார். இவர் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'தங்கல்' படத்தில் ஆமீர்கானின் மகளாக நடித்தவர். தேசிய விருதுபெற்ற, 'ஸ்கூல்' பட புகழ் இயக்குனர் நிவாஸ் தான் இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்கவுள்ளார்.