தேசிங் பெரியசாமி தம்பதிக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளார்
ADDED : 1675 days ago
கடந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா தாக்கத்தால் இந்தப்படத்தின் ஓட்டம் தடைபட்டாலும் மறு ரிலீஸ் செய்தபோதும், ஓடிடியில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், இன்னொரு கதாநாயகியாகவும் பங்குபெற்ற நிரஞ்சனா அகத்தியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் தேசிங் பெரியசாமி. இந்தநிலையில் இந்தப்படம் வெற்றி பெற்றதற்காகவும், மணமக்களுக்கு திருமண பரிசாகவும் புதிய போர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்றை பரிசளித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்.