உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா?

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா?

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது அவரையே கல்யாணம் செய்து கொள்ள தயாராக விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் அனுபமாவின் தாயார் தனது இன்ஸ்டாகிராமில் அந்த செய்தியை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''அனுபமாவும், பும்ராவும் இன்ஸ்டாராமில் பாலோ செய்வதை பிடிக்காதவர்கள் தான் அவர்களைப்பற்றி இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு முன்புகூட அவர்களைப்பற்றி இப்படித்தான் செய்தி பரப்பினார்கள். அதையடுத்து சோசியல் மீடியாவில் பாலோ செய்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது மீண்டும் பாலோ செய்வதை அடுத்து காதல் -கல்யாணம் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.

ஆனபோதும் நாங்கள் இதை பாசிட்டீவாகவே பார்க்கிறோம். அவர்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை. எதற்காக இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார் என்பது புதிராக உள்ளது. தற்போது அனுபமா ராஜ்கோட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அதனால் இந்த சமயத்தில் இப்படியொரு செய்தி பரவி வருவதை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !